திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு 8ம் தேதி வரை தடை

கொரானா பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய 8ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

Update: 2021-08-04 05:19 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்க கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு 3 ஆம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களும் மூன்றாம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடையாது என அறிவித்த நிலையில் மீண்டும் எட்டாம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு  அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News