அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

விடுமுறை நாளான இன்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-05-22 13:55 GMT

விடுமுறை நாளான இன்று அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். ஆனால், விடுமுறை நாட்களில் அவர்களது எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவிடும்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 4 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். கட்டண தரிசன பாதையிலும் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். மூலவரை தொடர்ந்து, அம்மன் சன்னதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News