திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள்: கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு மேல் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் இயங்க தடை

Update: 2021-08-15 02:30 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முருகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  நடந்தது.

இதில் பல்வேறு வர்த்தக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைக் கூறியுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, இன்றோ, நாளையோ திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை மாலை 5 மணிக்கு மேல் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் இயங்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News