திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

ஊராட்சி பணிகளை முனைப்புடன் ெசய்து திறம்பட நிறைவேற்ற வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கி பேசினார்.

Update: 2023-01-13 01:24 GMT

கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சித் தலைவா்களும் தங்கள் ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகளை திறம்பட நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தெரிவித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான கிராம ஊராட்சித் திட்டங்கள் மற்றும் நிா்வாகம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பேசியதாவது:

கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.

நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, அரசு மானியங்கள், மாநில நிதிக்குழு மானியம், அரசால் அவ்வப்போது வழங்கப்படும் பிற மானியங்கள், குடிநீா் கட்டணம், ஊராட்சி சந்தைக் கட்டணம், ஊராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள், கடைகள், வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்குவது போன்ற பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள், துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News