திருவண்ணாமலை சேஷாத்ரி ஆசிரமத்தில் 75 -வது ஆண்டு திருமந்திரம் மாநாடு

திருவண்ணாமலை சேஷாத்ரி ஆசிரமத்தில் திருமந்திரம் 75-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது

Update: 2022-04-26 13:36 GMT

ஸ்ரீ மீனாட்சி அம்மை கலிவெண்பா நூலினை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் வெளியிட்டார்

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் திருமந்திரம் 75-வது மாநாடு அமுதமொழி சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

மாநாடு ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலையார் திருமூலர் திருமந்திரம் திருக்குடில் இறைபணி சித்தர் முத்துகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த அறிஞர்கள் சைவசித்தாந்த வல்லுனர்கள் சிவனடியார்கள் பக்தர்கள் தமிழ் அறிஞர்கள் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் ஆய்வரங்கம் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். 

சேஷாத்திரி ஆசிரம நிர்வாகத் தலைவர் நீதியரசர் ராமநாதன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பேராசிரியர் மல்லிகா, திருமந்திரத்தில் தியானம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அமுதவல்லி சங்கரநாராயணன் சித்தர்கள் உலகம்- திருமந்திரம் எண்ணங்கள் என்ற இரு தலைப்புகளில் பேசினார். 

நிலக்கோட்டை மடாதிபதி ஞானபாரதி திருமந்திரத்தில் எனது உள்ளம் என்ற தலைப்பில் பேசினார். திருவண்ணாமலை இறைப்பணி சித்தர் திருமந்திரம் வாழ்வியல் மந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றினார். புலவர் மாசிலாமணி எழுதிய ஸ்ரீ மீனாட்சி அம்மை கலிவெண்பா திருப்போரூர் தவத்திரு சிதம்பர சுவாமிகள் அருளியது. நூலினை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் வெளியிட இறைபணி சித்தர் முத்துகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

 திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் சங்கத் தலைவர் இந்தராஜன்.வாழ்த்துரை வழங்கினார்.   புதுச்சேரி மணிமாறன் கல்பனா அவர்களின் வீணை இசை விருந்து நடைபெற்றது. மேலும் மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள் திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற வல்லுநர்கள் மடாதிபதிகள் பேசினர்.

Tags:    

Similar News