திருவண்ணாமலை பாஜக வேட்பாளர்: தணிகைவேல்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக திரைப்படத் தயாரிப்பாளர் தணிகைவேல் அறிவிப்பு

Update: 2021-03-15 05:55 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதை ஒட்டி அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடுகள் முடிந்து கடந்த இரு தினங்களாக தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவிற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்த்து தொண்டர்கள் காத்திருந்த நிலையில், இன்று பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் தணிகைவேலின் ஆதரவாளர்கள் நகரின் முக்கிய பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.



Tags:    

Similar News