ஜவ்வாது மலையில் கோடை விழா; எம்எல்ஏ ஆய்வு
ஜவ்வாது மலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.;
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் வரும் 30 மற்றும் 31ம் தேதி கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழா முன்னேற்பாடு பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் வரும் 30 மற்றும் 31ம் தேதி கோடை விழா நடைபெற உள்ளது. இந்த கோடை விழா மாவட்ட நிர்வாகம் முழு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற அத்திப்பட்டு பகுதியில் இந்த ஆண்டு கோடை விழா நடத்துவதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்கையில்,
ஜவ்வாது மலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் சுற்றுலா பயணிகளை அதிகளவு வரவேற்கவும் ஆண்டுதோறும் ஜவ்வாதுமலையில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும் பெண்கள் பயன்பெறும் வகையில் கோடை விழாவில் மகளீர் விடியல் பயணம், மகளீர் இலவச பேருந்தினை தொடங்கிவைக்க உள்ளார். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கோடை விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும். மேலும் சென்ற ஆண்டை போல் கோடை விழா அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் அமைய வேண்டும். அதேபோல் கண்காட்சி, துறை சார்ந்த ஸ்டால்கள் மற்றும் ஜவ்வாது மலையில் உள்ள சிறப்பு அம்ச நிகழ்வுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் , மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.