மக்கள் பயன்பாட்டுக்கு வந்த புதிய மேல் நீர் தேக்க தொட்டி

கலசப்பாக்கம் தொகுதியில் புதிய மேல் நீர் தேக்க தொட்டியை, மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-13 02:16 GMT

மேல் நீர் தேக்க தொட்டியை, மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த  கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் 

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காராபட்டு ஊராட்சியில் ரூபாய் 50 லட்சத்தில் புதிய மேல்நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மேல்நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது;

ஜல் ஜீவன் மிஷின் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சத்தில் புதிய 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் 332 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த மேல் நீர் கேட்கத் தொட்டியை திறந்து வைத்துள்ளோம். இதன் மூலம் இப்பகுதி மக்களின் தாகத்தையும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நீர் தொட்டி திறந்து வைக்கப்படுகிறது.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 பயனாளிகளுக்கு இலவச சேலை வழங்கப்படுகிறது. மேலும் காரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள் எங்கள் பகுதியில் இன்னொரு மேல் நீர் தேக்க தொட்டி வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் அதை அமைத்துக் கொடுக்கப்படும் என்று கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் உறுதி அளித்து பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், பி. டி. ஒ நிர்மலா, மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ,கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News