இரண்டாம் நிலை காவலர்களுக்கானபயிற்சி நிறைவு நாள் விழா

திருவள்ளூரில் நடைபெற்ற காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

Update: 2024-01-06 10:15 GMT

காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8 மாத பயிற்சி நிறைவு நாள் விழா.

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண், ஆகியோர்கள் கலந்து கொண்டு


துப்பாக்கி சுடுதல், கவாத்து பயிற்சி, சட்டப் பயிற்சி, என பயிற்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவலர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 காவலர்களுக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.


இதில் விழுப்பரம் 97,பேரும். திருவண்ணாமலை 80,பேரும். சேலம் 65, கடலுார் 62, ராணிப்பேட்டை 38, திருப்பத்துார் 25, வேலுார் 19, காஞ்சிபுரம் 17, சென்னை சிட்டி 9, ஆவடி சிட்டி 6, சேலம் சிட்டி 5, செங்கல்பட்டு 4, தாம்பரம் சிட்டி 2 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மட்டுமின்றி நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்த இரண்டாம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரபெருமாள், திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன்  பேசினார். 

அவர் பேசியதாவது,

இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்களை மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்துகிறேன்.

இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பும் 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியிய படிப்பும். 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, மூன்று பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளாதாகவும் ஒரு காலகட்டத்தில் காவலர்கள் எட்டாம் வகுப்பு படித்தால் போதும் அவர்களை காவலர்களாக சேர்த்துக் கொண்டனர். தற்போது காவலர் பணியில் இருக்கக்கூடியவர் நன்மதிப்பெண் காரணமாக  பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் உள்ளதாகவும். இது மிகவும் பாராட்டத்தக்கதற்குரியது என்றும் இது பொதுமக்களிடையே காவலர்களின் மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் அமைகிறது. காவலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News