மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட பொங்கல் விழா!

திருவள்ளூரில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-13 03:30 GMT

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருவள்ளூர் எலைட் சார்பில் சமத்துவம் பொங்கல் விழா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அந்தோணிசாமி கட்டிட வளாகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் குலோத்துங்கன் தலைமையில் சமத்துவ தைபொங்கல் விழா நடைபெற்றது.


இதில் 50-க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகளுக்கு rotary club of திருவள்ளூர் elite தலைவர் ராகுல், ரமேஷ் ஆகியோர் சார்பில் நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் விஜய்ராஜ், தோல் பிரிவு தலைமை மருத்துவர் வெங்கடாசலபதி, திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


இதில் ஐ ஆர் சி டி எஸ் இயக்குனர் ஸ்டீபன். திருவள்ளூர் உதவி கரம் மாவட்ட தலைவர் ஜெயவேல், வசந்தம் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் லிவிங்ஸ்டன், rotary கிளப் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜேஷ், கண்ணப்பன், சர்வீஸ் பாலாஜி. ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News