பெரியபாளையம் அருகே தீ பிடித்து எரிந்த கூலி தொழிலாளி வீடு!
பெரியபாளையம் அருகே மாகரல் மேட்டு காலனி பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்.
மாகரல் ஊராட்சியில் கூலித் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்தது. அவர் கோவிலுக்கு சென்று இருந்தபோது நள்ளிரவில் தீப்பிடித்ததில் ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயிக்கு இரையானது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த மாகரல் ஊராட்சி,மேட்டு காலனியில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது43) கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி குட்டியம்மாள்(வயது38). இத்தம்பதியினருக்கு கௌதம்(வயது23) என்ற மகனும், பாரதி(வயது21) என்ற மகளும் உள்ளனர். குட்டியம்மாளின் தாயார் லட்சுமி அம்மாள்(வயது55) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார்.
இவர்களின் மகன் கௌதம் திருமணம் ஆனதால் தனியாக வசித்து வருகிறார். பாஸ்கர் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து கொண்டுள்ளார். இதனால் இரவில் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் தங்குவது வழக்கமாகும். பாஸ்கரின் மனைவி,மகள், மாமியார் ஆகியோர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று இருந்தனர்.
இந்நிலையில், நேற்று விடியற்காலை இவரது வீடு தீப்பிடித்து எரிவதாக அருகில் இருந்த வீட்டினர் பாஸ்கருக்கு தகவல் அளித்தனர். விசயத்தைக் கேள்விப்பட்டு பதறியடித்துக்கொண்டு விரைந்து சென்று பார்ப்பதற்குள் வீடு முழுவதும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், ஃபேன், டிவி உள்ளிட்ட பொருட்களும், சீட்டு கட்ட பீரோவில் சேமித்து வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.20,000-ம் என மொத்தம் ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட்கள் மொத்தமாக கருகியது.
ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கியமான அட்டைகளும் தீயிக்கு இரையாயின. இந்த தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வழக்கு பதிவு செய்து தீவிபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த தீ விபத்து சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவலுக்காக:
வீட்டில் தீ விபத்துகளை தடுக்க சில முக்கியமான வழிகள் பின்வருமாறு:
- எப்போதும் தரமான மின்சார வயர்களையே பயன்படுத்தவும். பழைய அல்லது சேதமடைந்த வயர்களை உடனடியாக மாற்றவும்.
- மின்சார சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மின்சார சாதனங்களை பயன்படுத்தும்போது, அவற்றை அருகில் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் பொருட்களை வைக்காதீர்கள்.
- மின்சார சாதனங்களை பயன்படுத்திவிட்டு, அவற்றை முழுமையாக அணைத்த பின்பே விட்டுவிடவும்.
- மின்சார சாதனங்களை பயன்படுத்தும்போது, அவற்றை ஈரமான கைகளில் தொடாதீர்கள்.
- மின்சார சாதனங்களில் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் தண்ணீர், எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றாதீர்கள்.
- காற்று புகாமல் இருக்கும் இடங்களில் மின்சார சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- மின்சார சாதனங்களை பயன்படுத்தும்போது, அவற்றை அருகில் குழந்தைகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- இவை தவிர, வீட்டில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தீ விபத்துகளை தடுக்கலாம்:
- வீட்டில் தீ அணைப்பு சாதனங்களை எப்போதும் சரியாக பராமரிக்கவும்.
- வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான பயிற்சிகளை அனைவரும் பெறவும்.
- வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையைத் தொடர்பு கொள்ளவும்.
வீட்டில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தீ விபத்துகளை தடுக்கலாம் மற்றும் உயிரையும் சொத்தையும் பாதுகாக்கலாம்.