மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்

ஆவடி மத்திய பாதுகாப்புபடை ஊழியர்களுக்கு தடுப்பூசி மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

Update: 2021-05-26 08:13 GMT

ஆவடி பாதுகாப்பு படை ஊழியர்களுக்கு கொரோன தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஆவடி மாநகராட்சி கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா தடுப்பு மையம் என தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஆவடியில் செயல்படும் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளான எச்.வி.எப், ஓ.சி.எப், எஞ்சின் பேக்டரி ஆகிய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆவடி மாநகராட்சியில் உள்ள பாதுகாப்பு தொழிற்சாலையில் பணியாற்றக் கூடிய 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிப் போட இந்த தடுப்பூசி மையம் துவக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News