புதிய பூங்காவிற்கு அமைச்சர் நாசர் அடிக்கல்..!

ஆவடி அருகே ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவிற்கான அடிக்கல் நடவு செய்தார் அமைச்சர் நாசர்.;

Update: 2024-11-04 06:15 GMT

புதிய பூங்கா அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் நாசர்.

ஆவடி அருகே ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுகுத்தகை ஊராட்சி வசந்த நகரில் முதியோர்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பொழுது போக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கை ஏற்று ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30.லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பூங்கா அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து வைத்து அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதர், ஜி.விமல்வர்ஷன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, பொறியாளர் எம்.மோகன், உதயா, ஜமுனா ரமேஷ், சாந்தகுமாரி, இ.என்.சந்திரன், இ.பிரதீப், பாட்டனி எஸ்.கார்த்திக், யுவராஜ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News