முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சூளுரை

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார்-திருப்பூரில் நடைபெற்ற அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சூளுரை

Update: 2020-12-20 12:35 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தொழுவு, பொல்லிக் காளிபாளையம், கணபதி பாளையம் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன்,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பங்கேற்று மூன்று இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளிக்கை தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வார் என்றும், சேலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை விட நேற்று 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதுவே வெற்றியின் அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தான் குடும்ப அட்டைதாரர்கள் அனைவர்களுக்கும் ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப் படுகிறதா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எல்லா வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம் எனவும் அரசின் அனைத்து அறிவிப்புகளையும் விமர்சித்து குற்றம் சாட்டுவது திமுக தலைவர் ஸ்டாலின் வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News