பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில் ஆய்வு

Tirupur News- பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-06 13:46 GMT

Tirupur News- பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் சேகா்பாபு.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு  ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பாா்வையிட்ட அமைச்சா் சேகா்பாபு, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கோவிலில் வழிபாடு நடத்தினா்.

அப்போது, அங்கிருந்த பக்தா்கள் கோயில் முன்புறம் ராஜகோபுரம் கட்ட அரசு அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரா் கோவிலில் அருளானந்தசித்தா் ஜீவசமாதி மற்றும் ஈஸ்வரா் ஆகியோரை அமைச்சா் வழிபட்டாா். அப்போது, கோவிலில் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள பஜனை மட கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அமைச்சரிடம் பக்தா்கள் வலியுறுத்தினா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அவை விலகிக்கொள்ளப்பட்டவுடன் கோவில்கள் மேம்பாட்டுக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களுக்கு அறங்காவலா்கள் குழு நியமனம் செய்யப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

முன்னதாக, பல்லடம் மாதப்பூரில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலில் மகீமாலீஸ்வரா், மரகதாம்பிகை சன்னிதிகளில் வழிபாடு நடத்திய அமைச்சா், கோவில் வெளிபிரகாரத்தை வலம் வந்து வணங்கினாா்.

இதில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரதுரை, துணை ஆணையா் செந்தில்குமாா், மாவட்ட இந்து சமய அறநிலைய அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், அறங்காவலா் முத்துராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

Tags:    

Similar News