காவிரியில் வெள்ளப்பெருக்கு பற்றி திருச்சி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது பற்றிய ஆய்வு கூட்டம் திருச்சியில் முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-08-05 16:38 GMT
காவிரியில் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது பற்றிய ஆய்வு கூட்டம் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் தலைமையில் நடைபெற்றது.

மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பினை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வது பற்றிய ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையரும் தமிழக அரசின் முதன்மைச் செயலாளருமான டாக்டர் மணிவாசன் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News