திருவாரூரை குப்பையில்லா நகரமாக மாற்றும் பணிகள்:நகர்மன்ற தலைவர் தொடக்கம்

திருவாரூரை மாஸ் கிளினீங் முறையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வை நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தொடங்கி வைத்தார்

Update: 2022-04-23 13:20 GMT

திருவாரூரில் மாஸ்கிளீனிங் பணியை  தொடக்கிவைத்த நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியாசெந்தில்

தமிழகம் முழுவதும் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ள நிலையில் அதன்படி திருவாரூர் நகரத்தை குப்பையில்லா நகரமாக மாற்ற திருவாரூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் மாஸ் கிளீனிங் முறையை பயன்படுத்தி தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில் ஒன்பதாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட முதலியார் தெரு, ராஜா தெரு, மேல வடம் போக்கி தெரு, மடவாடியார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாஸ் கிளினீங் முறையை பயன்படுத்தி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை திருவாரூர் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் இணைந்து மேற்பார்வையிட்டு தூய்மைப் பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன், துப்புரவு அலுவலர் விஜயகுமார், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News