காயமுற்று பறக்க முடியாத ஆண் மயிலுக்கு சிகிச்சை

ரோட்டரி சங்கம் சார்பில் பறக்க முடியாத மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-01-01 09:30 GMT

காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, காக்கா கோட்டூர் பகுதியில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க தேசிய பறவையான ஆண் மயில் உடலில் காயங்களுடன் பறக்கமுடியாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில் கிராமத்திற்கு சென்று, பார்வையிட்டு உடனடியாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் தனபாலன் விரைந்து வந்து உடனடியாக மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர் விஜயகுமார் மருத்துவ குழுவினரால் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் வனச்சரகம் வனகாப்பாளர் முகம்மது அப்துல் சுக்கூர், கிங்ஸ் தலைவர் ராஜ் (எ) கருணாநிதியிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வின் போது கிங்ஸ் சங்க செயலாளர் உத்திராபதி, அழகப்பா, ராஜகணபதி, வேல்முருகன் தன்னார்வலர் மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News