திருவாரூரில் பாரம்பரிய உடையணிந்து போலீசார் பொங்கல் கொண்டாட்டம்

திருவாரூரில் காவல்துறையினர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-01-16 04:29 GMT
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் போலீசார் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஆண், பெண் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி ,சேலை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியாக பொங்கலை சூரியபகவானுக்கு படையலிட்டு சூரியபகவானை வழிபட்டனர்.

இதில் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Tags:    

Similar News