திருவாரூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு

திருவாரூர் நவீன அரிசி ஆலையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-28 12:00 GMT

திருவாரூர் நவீன அரிசி ஆலையில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் நவீன அரிசி ஆலையினை  மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

திருவாரூர் மாவட்ட நவீன அரிசி ஆலை 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆலையில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்பு கலன்களும், 200 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கலன்களும் உள்ளது/ மொத்தம் 7200 மெ.டன் நெல்லினை இருப்பு வைத்துக்கொள்ளும் அளவிற்கு வசதியுள்ளது.

தமிழகத்திலேயே எரிவாயு மூலம் இயங்கும் ஒரே நவீன அரிசி ஆலை இந்த ஆலையாகும். திருவாரூருக்கு 5 கி.மீக்கு அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திலிருந்து எரிவாயு குழாய்கள் மூலம் பூமிக்கடியில் தடம் பதித்து நவீன அரிசி ஆலைக்கு எரிவாயு வழங்கப்படுகிறது.

எரிவாயு மூலம் ஆலை இயங்குவதால் சுற்றுச்சுழல் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்காக புதிய நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமயமாகப் பட்டுள்ளது.

இந்த ஆலையிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மெ.டன் மூலம் நெல் அறவை செய்யப்பட்டு பொது விநியோக திட்டத்திற்கு அரிசி வழங்கப்படுகிறது இந்த ஆலையானது ஆண்டு ஒன்றுக்கு 30,000 மெ.டன் அறவை செய்யும் திறன் கொண்டது.

தற்பொழுது திருவாரூர் நவீன அரிசி ஆலையில் பச்சை அரிசி அறவை பணி நடைபெற்று வருகிறது. மேலும், புழுங்கல் அரிசி அறவை பணி ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர்  கூறினார்.

ஆய்வில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்.ஏ.ஜி.ராஜராஜன், உதவி பொறியாளர் .எஸ்.பாலபாஸ்கரன், மேலாளர் (தரக்கட்டுப்பாடு) .பி.பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News