திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2022-02-19 14:27 GMT

ஓஎம்எஸ் ஆய்வு அதிவேக விரைவு ர‌யி‌ல்.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு இருப்புபாதையின் தன்மை, தண்டவாள அதிர்வுகள் ஆகியவற்றை ஆய்வு செய்திட ஓஎம்எஸ் ஆய்வு அதிவேக விரைவு ர‌யி‌ல் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வுப் பணி இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வு திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை சென்றது. மீண்டும் அதேபோல மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கிராசிங் பாதைகளில் தற்போது 15கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டுள்ள நிலையில் மணிக்கு 30 கிலோ மீ‌ட்ட‌ர் வேகத்தில் இயக்கப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் திரும்ப உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் மூலம் தற்போது டெமு ரயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News