கனமழையால் திருவாரூர் கமலாலய குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்தது

கனமழை காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்து விழுந்தது.

Update: 2021-10-29 05:50 GMT

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலய குளத்தின் தடுப்பு சுவர் பலத்த மழையால் மீண்டும் இடிந்தது.

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் கமலாலய தீர்த்தம் குளத்தின் கரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து அதை தற்காலிகமாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. அதனையொட்டி நான்கு வீதிகளிலும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக மாணவர்கள், அலுவலகங்கள் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளான  நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக கமலாலய குளக்கரை தடுப்புகள் மீண்டும் இடிந்து விழுந்துள்ளது .தற்பொழுது இடைவிடாது மழை பெய்து வருவதன் காரணமாக இடி பாடுகளை உடனடியாக சரி செய்ய முடியாத சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது.

Tags:    

Similar News