புற்றுநோய் பரவலுக்கு காரணமாக உள்ள திருவாரூர் வாழைத்தார் மார்க்கெட்

திருவாரூர் வாழைத்தார் மார்க்கெட் புற்றுகோய் பரவலுக்கு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2022-01-13 08:33 GMT

திருவாரூர் வாழைத்தார் மார்க்கெட்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் வாழைத்தார் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதிலிருந்தும் வரும் வாழைத்தார்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். இங்கு வரும் வாழைத்தார்கள் மீது எத்தோபோன் எனப்படும் ரசாயன கலவையை தெளித்து உடனடியாக பழுக்க வைக்கும் பணியை இங்குள்ள வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி மூட்டம் போட்டு பழுக்க வைப்பதால் வாழைப்பழம் படுப்பதற்கு 3 முதல் 4 நாட்கள் பிடிக்கும், இந்நிலையில் இது போன்ற ரசாயன கலவையை தெளிப்பதன் மூலம் 3 மணி நேரத்திலேயே வாழைப்பழம் பழுத்து விடுகிறது. தொடர்ந்து இதுபோன்ற வாழைப்பழத்தை உட்கொள்ளும் பொழுது குடல் புற்றுநோய் போன்ற மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

குறைந்த விலைக்கு விற்கக்கூடிய வாழைப்பழமே ஏழை மக்கள் அதிகம் வாங்கி உண்ணக்கூடிய பழமாக உள்ளது. இதுபோன்ற ரசாயனங்களை கொண்டு வாழைப் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News