திருவாரூர் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரூ 12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2021-06-09 10:15 GMT

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் ரூ 12  லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 திருவாரூர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 12 லட்சம் மதிப்பிலான இரண்டு வென்டிலேட்டர் கருவிகள் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முகக்கவசம் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு).செ.பொன்னம்மாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.ஆர்.ஸ்ரீனிவாசன், மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர்.

இந்நிகழ்வில் --சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் மரு.உமா, மாவட்ட ரெட்கிராஸ்.சேர்மேன்.ஆர்.எஸ்.இராஜகுமார், ரெட்கிராஸ் செயலாளர் .ஜே.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News