திருவாரூரில் கடைகளில் அலைமோதிய கூட்டம, காய்கறி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

திருவாரூரில் ஊரடங்கு தளர்வால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி விலை உயர்வால் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-05-23 09:00 GMT

திருவாரூரில்  ஊரடங்கு தளர்வில் பொதுமக்கள், கூட்டம், கூட்டமாக அத்தியவாசிய  பொருட்கள் வாங்க குவிந்தனர்.

திருதமிழகத்தில் இன்றும் அனைத்து கடைகளும் இயங்கலாம் என அரசு அறிவித்த நிலையில் திருவாரூரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன பேருந்துகளும் இயங்கத் தொடங்கியது.

தமிழகத்தில் நாளை தினம் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது .இதன் காரணமாக இன்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் போக்குவரத்திற்கு பேருந்து சேவைக்கும் அனுமதி அளித்த நிலையில் உடனடியாக திருவாரூர் நகர் பகுதியில் உள்ள நகை கடைகள் ஜவுளி, மளிகை ,பர்னிச்சர் கடைகள் திறக்கப்பட்டது. மேலும் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

திருவாரூரில் இன்று காலை முதலே முக்கிய கடை வீதிகளில் மளிகை மற்றும் அத்தியாசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியது.பொதுமுடக்கத்தால் முன்று மடங்கு விலைக்கு காய்கறிகள் மக்கள் வாங்கி சென்றனர் .

திருவாரூரில் இன்று காலை முதலே கடைவீதியில் மக்கள் கூட்ட அதிகம் என்பதால் போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News