நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்

நீட் விலக்கு மாசேதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

Update: 2022-02-09 16:00 GMT

மாவட்ட கட்சி அலுவலத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த இந்து மக்கள் கட்சி இளைஞரணிமாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதாவை தமிழக ஆளுநர் ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில். இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பில் இன்று திருவாரூரில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்தும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும்  ஒரு மாதம்  நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

மாவட்ட கட்சி அலுவலத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தபின், மாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன்  பேசியதாவது:  நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழகத்திற்க்கு நீட் தேர்வு அவசியம் என்றும் தமிழக அரசு நீட் தேர்வை எதிர்ப்பதை கைவிட வேண்டும்.  இன்று தொடங்கப்பட்ட இந்த நீட் ஆதரவு கையெழுத்து இயக்கமானது ஒரு மாதம் நடைபெறும் என்றும், நீட் தேர்வின் அவசியம் குறித்து நகர பகுதி மட்டுமில்லாத கிராமப்புறவு மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களிடம் ஆதரவு கையெழுத்தை பெற்று தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இநிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு நீட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News