திருவாரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 837 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 837 வழக்குகள் எடுக்கப்பட்டு ரூ 3 கோடியே 3 லட்சத்தி 6,783 தொகைக்கு தீர்வு தொகையாக வழங்கப்பட்டது

Update: 2022-03-12 15:49 GMT

திருவாரூரில் நடைபெற்ற லோக்அதாலத் விசாரணையில் வழக்காடிக்கு தீர்வு அளித்த மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி.

நாடு முழுவதும் நடைபெற்ற மெகா லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூலமாக 2080 வழக்குகள் கோப்பிலிருந்து எடுக்கப்பட்டு 837 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூபாய் 3,03,06,783 சமரச தீர்வு தொகையாக வழங்கப்பட்டது .இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஜீவனாம்சம் , திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது . இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன்,சார்பு நீதிபதி சரண்யா ,மாவட்ட உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News