திருவாரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

Update: 2021-06-06 08:00 GMT

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு  

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

உணவின் தரம் குறித்து கண்டறிய சமையலறைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு தயாரிக்கப்படும் இட்லி, சாம்பார் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் மற்றும் சுவையினை ஆய்வு செய்தனர். அப்போது கொரானா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என நோயாளிகளுக்கே நேரடியாக செல்போனில் தொடர்புகொண்டு அவர்களிடம் விசாரித்தார்.

தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் கொரோனா  நோயாளிகள் தங்குவதற்காக ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடத்தின் கட்டுமான பணியை ஆய்வு செய்து விரைந்து பணியை முடிக்க ஆலோசனை வழங்கினார்

Tags:    

Similar News