திருவாரூரில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2022-01-17 08:46 GMT
திருவாரூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட கழகம் சார்பாக புதுத் தெருவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் 

பருவமழைகளால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் சம்பா அறுவடை பணிகள் துவங்கி 15 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாமல் உள்ளது. எனவே அரசு உடனடியாக முறையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்வது இயலாத காரியம். எனவே பழைய முறையை பின்பற்றி விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய ,நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் .

Tags:    

Similar News