எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் ஊழியர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-19 11:15 GMT

தனியாருக்கு பங்கு விற்பனையை எதிர்த்து திருவாரூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எல்.ஐ.சி. நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட ஜனவரி 19ஆம் தேதி எல்.ஐ.சி. தேசியமய தினமாக அலுவலர்களும், ஊழியர்களும், முகவர்களும் ப கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தி முகநூல், டுவிட்டர் இணைய தளங்கள் மூலம் அலுவலர்கள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் தங்கள் பிரச்சாரத்தை மக்கள் அறியும் வகையில் முன்னெடுத்தனர்.

எல்.ஐ.சி. தேசியமயத் தினத்தையொட்டி திருவாரூர் எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிக குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து ,எந்த கோரிக்கைக்களுகாக துவங்கப்பட்டதோ அந்த கோரிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிற வேளையில், எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் மதுசூதனன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் எடல் ஜெயராஜ்,காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வட்ட தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News