திருவாரூர் மாவட்டத்தில் புதிய இரண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

திருவாரூர் ஆட்சியரக வளாகத்தில் இரண்டு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் சேவையை ஆட்சியர் காயத்ரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-03 13:15 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தியானது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், களப்பால், திருத்துறைப்பூண்டி வட்டம், இடும்பாவனம் ஆகிய இரு பகுதிகளுக்கு இரண்டு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இவ்விரண்டு வாகனத்தினையும் சேர்த்து மொத்தம் இருபது 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தி மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து, கூத்தாநல்லூர் பகுதியினை சேர்ந்த 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தி மருத்துவ உதவியாளர் வள்ளி என்பவர் உயிரிழந்தமையால் அவரது வாரிசுதாரருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், 108 நிர்வாக கிளை மேலாளர் மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News