கொரடாச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் துவக்கம்

திருவாரூர் அருகே கொரடாச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தினை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-17 12:12 GMT

100 நாள் வேலை திட்டத்தை துவக்கி வைத்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முக்கிய வாக்குறுதியாக பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுகவினர் வெற்றி பெற்று பதவி ஏற்ற நிலையில் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமதகு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊர்குடி வாய்க்கால் தூர்வாரும் பணியை திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டம் இன்று கொரடாச்சேரி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வெள்ளமதகு பகுதியிலுள்ள ஊர்கூடி வாய்க்காலில் நூறு நாள் வேலைத் திட்டத்தினை துவக்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் வேலை அளவு என்பது அரசு அதிகாரிகள் நிர்ணயித்துள்ள அளவைவிட அதிகளவு நேரம் செய்து தமிழக முதல்வர் வழங்கிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம் என்பதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தருவோம் என்று இப்பகுதி மக்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

Tags:    

Similar News