திருவாரூர் அருகே திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் நெய்குள தரிசனம்

திருமீயச்சூர் லலிதா சகஸ்ரநாமம் உருவாகிய ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அன்னப்படையல் நெய்குள தரிசனம் நடைபெற்றது.

Update: 2021-10-17 02:59 GMT

திருவாரூர் அருகே ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் தீபாராதனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேலலிதா சகஸ்ரநாமம் உருவான இடமான, திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பாள் சமேத மேகநாதசுவாமி திருக்கோயிலில், நவராத்திரி விழா நடைபெற்றது. கடந்த 6.10 .2021 தொடங்கிய நவராத்திரி விழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 'அன்னப்படையல்-நெய்குள தரிசனம்' நடை பெற்றது.

இதனையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து இரவுஸ்ரீ சக்ர ராஜசிம்மம் அதில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்ற ஸ்ரீ லலிதாம்பிகைக்கு, சர்க்கரைப் பொங்கலில் குளம்போல் நிரப்பிய நெய்யில் தெரிகின்ற அம்பாளின் திருவுருவ பிம்பத்திற்கும் மற்றும் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது..

இந்த நிகழ்வில் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார் .மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சர்க்கரை பொங்கலில் உள்ள நெய் குளத்தில் தெரிகின்ற பிம்பத்தை தரிசித்து வழிபாடு செய்தனர்..

Tags:    

Similar News