திருவாரூரில் இரு தினங்களுக்கு முன் நகை கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவாரூர் அருகே இரு தினங்களுக்கு முன் தம்பதியினரை தாக்கி 11 பவுன் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-04 12:39 GMT

நகை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர்.

திருவாரூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரராகவன்(வயது51 )கட்டிட பொறியாளராக உள்ளார். இவரது மனைவி மேகலா (49) திருவாரூர் துர்கா சாலையிலுள்ள தையல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அலிவலம் அருகே உள்ள சாலையில் மர்ம நபர்கள் 4 பேர் வாகனத்தை மறித்து வீரராகவனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் மேகலா அணிந்திருந்த 11பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.அவ்வழியே சென்றவர்கள் மீட்டு உடனடியாக வீரராகவனுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக பழையவலம் கிராமத்தை சேர்ந்த நிவாஸ் என்பவருக்கும் செட்டியமூலை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் அந்தப் பெண்ணுடன் வீரராகவனும் கள்ளதொடர்பில் இருந்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் வீரராகவனை நிவாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாக்க திட்டமிட்ட இருந்தார். இதன்படி நிவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பழையவலம் கிராமத்தை சேர்ந்த ராஜா, ஓடாச்சேரியை சேர்ந்த அப்பு என்கிற மணிகண்டன், கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து வீரராகவனை இரவு வீடு திரும்பும் நேரத்தில் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். வழக்கை திசைதிருப்பும் நோக்கில் வழிப்பறியில் ஈடுபட்டது போன்று நாடகம் நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். 

Tags:    

Similar News