திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு

திருவாரூர் விளமலில் சாலையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிடித்து அடைத்தனர்

Update: 2021-10-28 15:01 GMT

திருவாரூரில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட மாடுகள்  அடைத்து வைக்கப்பட்டன.

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் கூட்டுறவு நகர் வரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன.

இந்த மாடுகளை காவல்துறைக்கு சொந்தமான மைதானத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் பிடித்து அடைத்தனர்.

பின்னர் உரிமையாளர்களிடம் ஒரு மாட்டிற்கு தலா 500 வீதம் அபராதம் விதித்து மீண்டும் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று மாடுகளை பொதுமக்களை பாதிக்கும் விதமாக பொது இடங்களில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News