வீடு தேடி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு கைவிட திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-11-19 07:00 GMT

திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் சங்கத்தினர்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்படும் சிரமத்தை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி முகாம் பணி நேரத்தை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மேற்கொள்ளாமல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என குறைத்து பணி செய்ய ஆணையிட வேண்டும் ,தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். .

Tags:    

Similar News