திருவாரூர் மாவட்டத்தில் 796 ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 796 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தினை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-01-12 06:54 GMT

திருவாரூர் மவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தினை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் முதியோர்களுக்கான நிதி உதவி வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. குடவாசல், வலங்கைமான், நன்னிலம், திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்சிகளில் மாவட்டம் முழுவதும் 1800 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக 796 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார். தொடர்ந்து முதியோர்களுக்கான உதவித்தொகையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News