திருவாரூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-28 11:41 GMT

திருவாரூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து "பொய்வழக்கு போடாதே ,ஜனநாயகத்தை படுகொலை செய்யாதே, காவல் துறையை ஏவல் துறையாக மாற்றாதே"  என்பது போன்ற கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் கழக அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News