டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-11-14 11:14 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிரை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சி.பி.எம். ) மாநில பொதுச்செயலாளர் சண்முகம். பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .இதன் தொடர்ச்சியாக அம்மையப்பன் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் சம்பா நெற்பயிர் தண்ணீரில் முக்கிய பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்த போது

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.எனவே ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை தமிழக அரசு வழங்க வேண்டும்.

சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்துகொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு போதிய அவகாசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தலைவர் தம்புசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News