திருவாரூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : எம்எல்ஏ கலைவாணன் ஆய்வு

திருவாரூரில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ கலைவாணன் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-04 13:40 GMT

திருவாரூரில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் மற்றொரு மேம்பட்ட வடிவமான ஒமிக்ரான் பரவி வரும் சூழலில் அதனை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே வழியாக இருக்கிறது.

அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று 13 ஆம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் 290 இடங்களிலும், நகராட்சிகளில் 42 இடங்களிலும், பேரூராட்சிகளில் 24 இடங்களிலும், 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 415 இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கௌரிசாமி நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மீனாட்சி சூரியபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News