திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-11 12:28 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதனடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. எனவே, நம்மையும், நமது சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இம்முகாமில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி தகுதியேற்பு நாள் கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். மேலும்  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 9 மாதங்கள் அல்லது 39 வாரம் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி எளிதில் அணுக கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும், இந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 22ம் கட்டமாக நாளை 12.02.2022 திருவாரூர் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 246 இடங்களிலும், நகராட்சிகளில் 39 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நடமாடும் கொரோனா தடுப்பூசிகுழு 40 என மொத்தம் 400 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News