மகளிரிடம் வசூல் தனியார் நிதி நிறுவனதுக்கு பூட்டு

திருவாரூரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி பொதுமுடக்க காலத்தில் மகளிர் குழுக்களிடம் கட்டாய கடன் வசூல் செய்து செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டினர்.

Update: 2021-05-19 11:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் ஊரடங்கு காலத்தில் கட்டாய கடன் தொகைவசூல்  செய்யக்கூடாது.

 தனியார் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்படவேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டிருந்தார்.

திருவாரூர் தெற்கு வீதியில் செயல்பட்டுவரும்  தனியார் நிதி நிறுவனத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு செயல் பட்டு வந்தது.,அதன் ஊழியர்கள் ஆட்சியரின் உத்தரவை மீறி்மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கட்டாய கடன் தொகை வசூலில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் திருவாரூர் வட்டாட்சியருக்கு தெரியவந்தது.இதையடுத்து வட்டாட்சியர் நக்கீரன் உத்தரவுபடி திருவாரூர் வருவாய் ஆய்வாளர் பக்கிரிசாமி,மற்றும் துணைவட்டார வளர்ச்சி அதிகாரி புவனேஷ்வரி ஆகியோர் காவல்துறையினரை துணையுடன் தெற்கு வீதியில் செயல்பட்டுவந்து தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றனர.

அப்போது 30 க்கும் மேற்பட்ட. ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்துவருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அரசின் உத்தரவை மீறி  செயல்பட்ட  நிதி நிறுவனத்தை  உடனடியாக  மூட உத்தரவிட்டனர். ஊழியர்களின் எதிர்ப்புக்கிடையே வருவாய்த்துறையினர் அலுவலகத்தை மூடினர்.

Tags:    

Similar News