தொடர் கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு

Update: 2021-11-25 14:44 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News