திருவாரூர் மாவட்டத்தில் பூஜாரிகள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம்

கிராம கோவில்களில் பாரம்பரிய முறைபடி ஆடி மாத திருவிழாக்கள் நடை பெற அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு கிராம பூஜாரிகள் பேரவை கோரிக்கை

Update: 2021-07-19 06:30 GMT

திருவாரூர் மாவட்ட கிராமத்தில் நடைபெற்ற பூஜாரிகள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு கிராம பூஜாரிகள் பேரவையின் திருவாரூர் மாவட்ட அமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிராம கோயிலில் பூசை செய்யகூடிய பூஜாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக உள்ளது. மேலும், தற்பொழுது கோவில்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும் கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் கூறும்போது, தற்பொழுது ஆடி மாதம் என்பதால் கிராமப்பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாரம்பரிய வழக்கப்படி திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த நிகழ்வில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் நலவாரியத்திற்கான விண்ணப்பங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பூஜாரிகள் பேரவையன் தஞ்சை மண்டல அமைப்பாளர் பாவேந்தர் ஜி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் அப்பு வர்மா, இணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News