திருவாரூர்: இடைத்தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-09-27 10:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும்  நுண்பார்வையாளர்களுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர்.டாக்டர்.இரா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 09.10.2021 அன்று நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு அமைக்கப்பட்ட 147 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றம் நிறைந்தது எனக் கண்டறியப்பட்ட 39 வாக்குச்சாவடி மையங்களில், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள நியமனம் செய்யப்படவுள்ள தேர்தல் நுண்பார்வையாளர் கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை கண்காணித்து அதன் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்.தெய்வநாயகி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News