திருவாரூர் நகர்மன்றத் தேர்தலில் வென்ற கிங்ஸ் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு

திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கிங்ஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது

Update: 2022-02-26 14:46 GMT

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில் நடந்து முடிந்த திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடிய கிங்ஸ் உறுப்பினர்கள் ரஜினிசின்னா மற்றும் ராமு ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமை  வகித்தார். துணை ஆளுநர் ராமதுரை, சங்க சேவை திட்ட இயக்குனர் கனகராஜன் ஆகியோர் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் செந்தில்குமார் மற்றும் சாக்ரடீஸ் ஆகியோரை இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உறுப்பினர் வளர்ச்சித்திட்ட மாவட்டத்தலைவர்  கடலூர் ராசன்  ஆகியோர்  கலந்து கொண்டு பாராட்டிப் பேசினர்.

Tags:    

Similar News