திருவாரூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-20 11:30 GMT
திருவாரூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20ந்தேதி முதல் 25ந்தேதி வரை மழைநீர் வடிகால்கள் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திட உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால் ஆகியவைகளை மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாம் நடைபெற்றது.  மாவட்ட  கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் இந்தபணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்விற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர்.பிரபாகரன், பழனியாண்டவர் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர்.பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் .செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News