குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவாரூர் குறைதீர் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2022-03-21 13:38 GMT

மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 239 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 440 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தினை 16 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம்;, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News