கையடக்க கணினியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு

9 ம் வகுப்பு மாணவன் கையடக்க கனிணியை கண்டுபிடித்ததற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-07-29 11:30 GMT

கையடக்க கணினி மைய செயலாக்க கருவியை உருவாக்கிய பள்ளி மாணவன் மாதவ்வை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பாராட்டினார்.

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தில் வசித்துவரும் சேதுராமன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ். 9ம் வகுப்பு பயின்றுவரும் இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கி வந்ததார். அதன் அடிப்படையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அக்காலத்தினை பயனுள்ளதாக பயன்படுத்தி கையடக்க கணினி மைய செயலாக்க கருவியினை கண்டுபிடித்துள்ளார். இதற்காக 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாக மாதவ் தெரிவித்தார்.

இதன்மூலம், "டெரா பைட் இந்தியா சிபியு மேனுபாக் சரிங் கம்பெனி" என்ற நிறுவனத்தை தொடங்கி, இணையதளம் வாயிலாக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் தகவலை கேட்டறிந்து, நேரில் அழைத்து மென்மேலும் பல சாதனைகளை படைத்திட மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Tags:    

Similar News