திருவாரூரில் மழையால் சேதமடைந்த விளைநில பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு

மத்திய அரசு தேசிய இடர்ப்பாட்டு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருவாரூர் விவசாயிகள் மத்திய குழுவிடம் கோரிக்கை.

Update: 2021-11-23 13:07 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலப் பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் குழுவினர் தற்போது தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே காவனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து மழை நீரில் மூழ்கி அழுகிய பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இந்த குழுவில் வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலத்துறை இயக்குநர் விஜய ராஜ் மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ராணஞ்சாய் கிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் வரப்பிரசாத் ஆகியோருடன் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் சுரேஷ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News